தப்பு கணக்கு
இங்கிலாந்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடரை ஆவலுடன் எதிர்பார்த்தேன். ஏமாற்றம். ஆஸ்திரேலியா நல்ல பவுலிங், இங்கிலாந்து நல்ல பாட்டிங். ஹேசல்வுட், ஸ்டார்க், கமின்ஸ், போலந்து, லியன் எல்லாருமே விக்கெட் எடுத்து மாட்ச்சை ஜெயித்துக் கொடுக்கக் கூடியவர்கள். இவர்களுக்கு முட்டுக் கொடுக்க கிரீன். இங்கிலாந்து பத்து விக்கெட் வரை ரன் அடிக்கக் கூடியவர்கள் என்று தப்புக் கணக்கு போட்டேன். முதியோர் ஆட்டம் மாதிரி இருக்கிறது. இரண்டு அணிகளும் ரொம்ப சராசரி.
இந்த மாதம் நான்காம் தேதி கணக்கு வைத்துக் கொள்ளத் துவங்கியபின் சரித்திரம் காணாத வகையில் புவியில் அதிக வெப்பம் கண்ட நாள் என்று படித்த நினைவு. ஆனால் சென்னையில் இப்போது மிதமாக இருக்கிறது. நல்ல வெதர் என்று சொல்லிக் கொள்கிறோம்.
அப்ஸிடியனை வேறு மாதிரி பயன்படுத்தும் உத்தேசம் இருக்கிறது. அப்புறம் சொல்கிறேன்.