பூட்டு
இப்போதெல்லாம் நான் இணையத்தில் மிகக் கறாராக வேண்டாத விஷயங்களை தவிர்த்து விடுகிறேன். இதைப் பெருமையாக சொல்லவில்லை. முதலில் தப்பு செய்கிறோமோ என்ற சந்தேகம் இருந்தது. இரண்டு மாத அனுபவத்தில் இது ரொம்ப சரியான அணுகுமுறை என்பது புரிந்து விட்டது.
ஒரே சமயத்தில் எல்லாரும் ஒருத்தரை திட்டுகிறார்களா, ம்யூட். ஊரறிந்த அயோக்கியனா, எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, அவனைப் பற்றிய பேச்சுக்கு போடு பூட்டு. அடையாள அரசியலில் அளவுக்கு மீறி கொந்தளிக்கிறார்களா, அவர்கள் நமக்கு தேவையில்லை. இது எல்லாம் மனசுக்கு அமைதி அளிக்கிறது என்பது மட்டுமல்ல, பல விஷயங்களில் கவனம் செலுத்தவும் நேரம் கொடுக்கிறது.