பதிவுகள்

ஒரு சிறு மன்னிப்பு கோரல்

ஒரு வேலையை டெஸ்க்டாப்பில் செய்ய ஆறு மணி நேரம் ஆனால் மொபைலில் செய்ய பதினெட்டு மணி நேரம் ஆகலாம், ஆனால் அது செய்ய முடியாத வேலையில்லை. அப்புறம் பார்க்கலாம் என்று தள்ளி வைத்து ஏறக்கட்டி விடுகிறோம். சோம்பல் ஒரு காரணம், வேலை கஷ்டமாக இருக்கிறது என்ற அலுப்பு ஒரு காரணம். இது எதுவானாலும் அதைச் சொல்லி நியாயப்படுத்த முடியாது.

தன் கதை குறித்து எதுவும் சொல்லவில்லை என்று ஸ்ரீதர் சொல்கிறார்-. அவர் என்னதான் விளையாட்டாக எழுதியிருந்தாலும் இது சீரியஸான விஷயம்தான்.

மன்னிப்பு கேட்பதானால் எத்தனை பேரிடம் மன்னிப்பு கேட்பது? வருத்தப்பட்டாலும் அதற்கு ஒரு தீர்வு இருக்க வேண்டும். எதிர்பார்க்க வேண்டாம் என்று சொல்லலாம், ஆனால் அப்படி விலகிக் கொள்வது சாத்தியமில்லை.

தள்ளிப் போடுகிற பல விஷயங்கள் மறந்து மறைகின்றன. மனிதர்களும்தான். அதுவரையும் அதற்கு அப்புறமும், எத்தனை குறைகள் நம்மிடம் இருந்தாலும்கூட உடன் இருந்தவர்களை குற்றம் சொல்ல முடியாது. ஸ்ரீதர் அவர்களில் ஒருவர் என்பது அவரது துரதிருஷ்டம்.

#apologia