அபத்த தரிசனங்கள்
தன் விஷயத்தில் சென்சிடிவாகவும் பிறர் விஷயத்தில் இன்சென்சிடிவாகவும் நடந்து கொள்பவனுக்கு என்ன நுண்ணுணர்வு இருக்கிறது?
வக்கிரங்களை விட்டு விடுவோம், குரூரமான நடத்தையே நுண்ணுணர்வின்மைதான். அடுத்தவர் வலிக்கு இரக்கப்படாமல் தன் வலிக்கு இட்டுக் கட்டி ஒப்பாரி வைப்பதா கலை?
கேட்க நன்றாக இருக்கிறது என்பதற்காக பனை மரத்தில் பால்தான் வடியுது என்று நம்ப சொல்வார்கள் போல- கலைஞனுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதற்காக நாம் கேனையர்கள் பட்டம் தரித்தாக வேண்டும்!
கேன்சல் கல்ச்சர் பற்றிய விமர்சனங்களை கேட்டுக் கேட்டு அலுத்துப் போய் விட்டது. ஒருவர் அதிகார துஷ்பிரயோகம் செய்து விட்டார் என்று தெரிகிறது, இனி அப்படி நடக்காமல் தடுப்பது எப்படி? அவரது அதிகாரத்தைக் குறைப்பதுதான் வேறு பலர் பலியாகாமல் காப்பாற்றும். யாரும் அவர்களது கதை கவிதைகள் சினிமா காமெடிகளை ரசிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை.
Elite Impunityயை நாம் ஏற்றுக் கொண்டதால்தான் accountabilityயை எதிர்பார்ப்பது, பின்விளைவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்வது நமக்கு அத்துமீறலாகவும் அநீதியாகவும் தெரிகிறது.
மற்றபடி டில்பர்ட் கார்ட்டூன்கள் நன்றாக இருக்கும்போது நானும்தான் ரசிக்கிறேன். எலான் மஸ்க் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த வருத்தமும் இல்லை.