பதிவுகள்

ஓரிரு விஷயங்கள்

வாழ்க்கையில் எந்த விஷயத்திலும் சீரியஸாக இல்லை என்று நினைக்கிறேன், அப்படி காட்டிக் கொள்வது இப்போதும் சாத்தியம், ஆனால் அந்த ஆர்வம் குறைந்து விட்டது.

Judas and the Black Messiah பார்த்தேன். இன்று நடப்பதைக் காட்டுவது போல் உள்ளது. அல்லது, எதுவும் மாறவில்லை என்பது உண்மையாக இருக்கலாம். போலீசுக்கு எதிரான வசனங்கள், சோஷலிஸம் போன்ற விஷயங்கள் இப்போதும் ஒரு புரட்சி பாவனையில் பேசப்படுகின்றன. மனதை கனக்கச் செய்யும் படம், பார்க்கலாம். சிலரது நடிப்பு சக்திகரமாய் இருக்கிறது. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம்.

மற்றபடி விஷயமில்லை. ராண்டமாய் ஒன்று சொல்வதென்றால் இதை டைப் செய்யும் இதே வேளை, யூட்யூபில் தேவார பாடல்கள் ஒரு ப்ளூடூத் ஸ்பீக்கரில் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ZOOK என்ற சீன தயாரிப்பு, பிரமாதமாக இருக்கிறது. வாங்கி ஐந்தாறு ஆண்டுகள் ஆகின்றன, ஒரு பிரச்சினை கொடுக்கவில்லை. பாட்டரி நெடுநாள் நிற்கிறது.

நான் இதை லினக்ஸில், அதற்குரிய ஃபோனடிக் ஆப் கொண்டு டைப் செய்கிறேன். கூகுள் ட்ரான்ஸ்கிருப்ஷன் அருமையாக இருந்தது, அதற்கடுத்தபடி விண்டோஸில் மைக்ரோசாஃப்ட். இது மூன்றாம் தரம்தான். ஒவ்வொரு வார்த்தையையும் யோசித்து யோசித்து டைப் செய்ய வேண்டியிருக்கிறது, நிறைய எழுதி எழுதி அழிக்கிறேன். அதனால்தான் எழுதுவதில்லை என்று சொல்ல மாட்டேன், ஆனால் அதுவும் உண்டு.

#random