பதிவுகள்

அசாத்திய வீரர்கள்

மூபியில் The Fantastic Mr Fox பார்த்தேன். முதலில் ரோல்ட் டால் எழுதிய கதை என்று தெரிந்தபோது கொஞ்சம் துணுக்குற்றேன். அப்புறம் இது வெஸ் ஆண்டர்ஸன் படம், ஜார்ஜ் க்ளூனி இருக்கிறார் என்று தெர்ந்ததும் நம் வோக் நுண்ணுணர்வுகள் சேதாரம் ஆகாது என்று நிம்மதி பெருமூச்சு விட்டேன். அது சரிதான். ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி, எல்லாரும் நல்ல மாதிரி, என்னதான் நாகரீக வாழ்க்கை வாழ்ந்தாலும் விலங்குகளின் இயற்கை சுபாவம் கட்டுக்கடங்காத தன்மை கொண்டது என்று அனார்க்கியைக் கொண்டாடும் படம், திருப்தியாக இருந்தது. படம் பெரிய சுவாரஸ்யமில்லை, ஆனால் அலுக்கவில்லை. பார்க்க முடிந்தது. கொஞ்சம் பார்முலாத்தன்மை இருந்தால் அதற்கு கதாசிரியர்தான் காரணம், இயக்குனரைக் குறை சொல்ல முடியாது.

நேற்று இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மாட்ச் மிக சுவையாக இருந்தது. பத்து மணி வரை தொலைக்காட்சியில் பார்த்தேன், அப்புறம் கிரிக்இன்போ தளத்தில் ஆட்ட நிலவரத்தைப் பின் தொடர்ந்தேன். இங்கிலாந்து ஆதரவாளன் என்றாலும் ஆஸ்திரேலியா வென்றதில் வருத்தமில்லை. ஒன்பதாம் விக்கெட்டுக்கு ஐம்பது ரன்கள் போல சேர்க்கும் எந்த அணியும் வெற்றிபெறத்தக்க அணிதான். போதாக்குறைக்கு, வேகமாக வேறு கமின்ஸ் அந்த ரன்களை அடித்தார். பாஸ்பால்தான் எப்படியும் வெற்றி பெற்றது. இந்த வெற்றி கிரிக்கெட் ரசிகர்கள் நம் வெற்றி.

#random