பதிவுகள்

எமிலி டிக்கின்ஸன் கவிதை ஒன்று

எந்த ஒரு நற்செயலும் தண்டிக்கப்படாதிருத்தல் ஆகாது, என்பது என் அண்மைய கால போக்காக இருக்கிறது. இதை தவிர்க்க இயலவில்லை.

சென்ற வாரம் கவிஞர் ந. ஜெயபாஸ்கரனின் கவிதை நூல் ஒன்று கிடைத்தது. எமிலி டிக்கின்ஸனின் சில கவிதைகளை மிகச் சிறந்த வகையில் அவர் மொழியாக்கம் செய்திருக்கிறார். அதை அவர்தான் அனுப்பியிருந்தார், என்ன கருத்து சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். எது சொன்னாலும் சம்பிரதாய புகழ்ச்சியாக இருக்கும் என்று தோன்றியதால் எதுவும் சொல்லவில்லை.

அவரது முன்னுரை மிகச் சிறப்பான ஒன்று, அது மனதில் இருந்தது. அதிலும் குறிப்பாக அவர் அளித்த ஒரு மேற்கோள்:

"அபிதா சக்தியால் உணர்த்தப்படும் முக்கிய பொருளும் அப்பொருளை அளிக்கும் சொல்லும் பின்னணியில் இருந்து கொண்டு எந்த ஒரு பொருளை தொனிக்கும்படி செய்கின்றனவோ, அந்தப் பிறிதொரு பொருள்தான் தொனிப் பொருள்," என்று ஆனந்தவர்த்தனர் விளக்குகிறார்.

அந்த தொனிப் பொருள் ததும்பும் எமிலியின் கவிதைகள் அதனாலேயே பிறிதொரு மொழிக்குள் அடங்க மறுக்கின்றன.

ஆங்கில கவிதைகளின் மொழியாக்கங்கள், இரு மொழிக் கவிதைகளை ஒருங்கே வாசிப்பதால்தான் நிறைவு பெறுகின்றன; அது இயலாதெனில், மொழிபெயர்ப்பின் தேர்வுகள் குறித்த உரையாவது இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை எனக்கு இருப்பதை நண்பர்கள் அறிவார்கள்.

ஜெயபாஸ்கரன் மொழியாக்கம் குறித்து நான் கருத்து சொல்ல வேண்டிய தேவையில்லை. அவரது முன்னுரை மேற்கண்ட அணுகுமுறையை அவர் மேற்கொள்ளாதது எத்தனை பெரிய இழப்பு என்பதற்கு சான்று.

நானும் அது போல ஒன்று முயற்சி செய்தேன், இதன் சாத்தியங்களை உணர்த்த.

வழக்கம் போல Happy Net Boxல் முதலில் பகிரப்பட்டு, பின்னர் Friendicaவில் வலையேறியிருக்கிறது, வாசித்துப் பாருங்கள்

#poetry #translation