பதிவுகள்

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் கட்டுரை

இங்கும் சிம்பிள்நோட்டிலும் ஹெச்டிஎமெல் கிடையாது. இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி மார்க்டவுண்களை அங்கீகரிக்கின்றன. அப்சிடியனும் அப்படிதான். எனவே இது போன்ற இடங்களில் இடுகையிடுவதில் ஒரு ஆர்வம் இருக்கிறது.

அதனால் செயற்கை நுண்ணறிவு குறித்து அப்சிடியனில் எழுதி அதை காப்பி செய்து சிம்பிள்நோட்டில் ஒட்டினேன். அது போதாது, இல்லையா? வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் அதற்கு சுட்டி கொடுத்தேன். கொஞ்ச நேரம் முன்னாடி, "இதெல்லாம் இங்கு எதற்கு?" என்ற கேள்வி எழுந்ததும் இரண்டாம் கேள்விக்கு இடம் கொடுக்காமல் அதை நீக்கி விட்டேன்‌.

இன்று வீட்டில் ஒரு விசேஷம் இருந்ததால் ஆபிஸ் போகவில்லை. அது முடிந்ததும் மருத்துவரிடம் போக வேண்டியிருந்தது. அங்குதான் இந்த வேலை செய்தேன்.

பதாகை வேலை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. நாளை இரவு பதிப்பிக்க முடியும் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.

#history #internet