பதிவுகள்

நம்ப முடியாத நல்லவர்கள்

அமெரிக்க லெஃப்ட் லிபரல் மீடியாவின் தாக்கத்தால் நானும் கூட மெகாரிச் மீது அவநம்பிக்கை கொண்டிருந்தேன், அது தவறு. அமெரிக்க பணக்காரர்கள் வேண்டுமானால் மோசமாக இருக்கலாம், நம்மவர்கள் நல்லவர்கள்.

நான் பேர் சொல்ல விரும்பாத சர்ச்சைக்குரிய நிறுவனம் ஒன்றின் பங்குகள் அந்நிய அமைப்புக்களின் செயல்பாடு காரணமாக சரிந்த விஷயம் உங்களுக்கு தெரிந்திருக்கும். முதல் திரட்டும் நேரத்தில் இது நடந்ததால் புதிய பங்குகளை வாங்க ஆளில்லாத நிலையில், நஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்று சரிந்து விட்ட பங்குகளை முதலில் வைத்த விலைக்கே வாங்கி ஆதரித்தார்கள் பிற முதலாளிகள். இதுவே மெய் சிலிர்க்க வைக்கும் விஷயம் என்றால், என்னால் நீங்கள் நஷ்டப்பட வேண்டாம், என்று பங்குகளை கொடுக்க மறுத்து வர்த்தகத்தை ரத்து செய்து விட்டது பெரிய நிறுவனம். குபேரன்கூட இப்படி செய்ததில்லை என்று நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.

நாளுக்கு நாள் நமக்கெல்லாம் சேமிப்பு வாய்ப்புகள் குறைந்து வருகிறது என்று வருந்தும் ஊதியம் வாங்கும் நடுத்தர மக்களுக்கும் இதில் ஒரு நற்செய்தி இருக்கிறது. நாமும் பங்குச் சந்தையில் தைரியமாக இறங்கலாம், கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கக்கூடிய அதுவும் பாதுகாப்பான முதலீடுதான். நாம் வாங்கிய பங்குகளின் விலை ஒரு வேளை சரிந்தாலும்கூட நம்மை நஷ்டப்பட விட மாட்டார்கள் நம் முதலாளிகள். நம்மிடம் விற்ற விலைக்கே வாங்கிக் கொள்வார்கள்.

இது நம் மண்ணுக்கு மட்டுமே உரிய சிறப்பு என்று நினைக்கிறேன்.


டிஸ்கி: எனக்கு நிதி நிர்வாகம் குறித்து எதுவும் தெரியாது, தலைப்புச் செய்திகள் பார்த்த அளவில் சொல்கிறேன். யாரும் இதை முதலீட்டு பரிந்துரையாக எடுத்துக் கொள்ள வேண்டாம். தக்க ஆலோசனை பெற்று உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

##funny