இன்றைய தகவல்
வெகு நாட்களுக்குப் பிறகு ரா. கிரிதரனுடன் வாட்ஸ்அப்பில் உரையாடினேன், மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கும் அப்படி இருந்திருக்கும் என்று சொல்ல முடியாது.
நடராஜனையும் இங்கு ஒரு போர்டு போட்டு பதிவுகள் எழுதச் சொன்னேன், அவர் செய்வது சந்தேகம்.
மற்றபடி இன்று பொங்கல் நல்லபடி முடிந்தது. எல்லாருக்கும் மகிழ்ச்சி. வாழ்த்துச் செய்தி சொன்னவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி கிடைக்கும்.
வெகு நாட்களாக ஜர்னல் மெயின்டெய்ன் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்தேன். இரண்டு மூன்று துவங்கி கைவிட்டிருக்கிறேன். இருந்தாலும் இன்று நல்ல நாளாக இருக்கிறதே என்று ஒரு எண்பது பக்க நோட் வாங்கி வந்து நாளொன்றுக்கு ஒரு பக்கம் குறித்தேன், பார்க்கும் படங்கள் மற்றும் படிக்கும் புத்தகங்களைப் பட்டியலிடவும் இரண்டு பக்கங்கள் உண்டு.
இன்று ஒரு தகவல் - Www பயன்படுத்தாத ஒரு தகவல் பரிமாற்ற முறை உண்டு என்பதை அறிந்து கொண்டேன். உங்கள் கணினியில் கமாண்ட் பிராம்ப்ட் பெட்டிக்குள் finger natbas@happybox.com என்று தட்டினால் அங்கு நான் வைத்திருக்கும் ஸ்டேட்டஸை பிரௌஸர்களோ ஆப்புக்களோ இல்லாமல் உங்களால் பார்க்க முடியும். இது பழங்காலத்தில் புழக்கத்தில் இருந்த விஷயம் என்று அறிகிறேன்.