பதிவுகள்

இன்று இணைய வரலாற்றில் ஒரு செவ்வெழுத்து தினம்

இன்று தனி உரையாடல்களில் சாட்ஜிபிடி பயன்படுத்த துவங்கியிருக்கிறேன். இது மோதல்களையும் பிழைபுரிதல்களையும் தவிர்க்கும் என்று எதிர்பார்க்கிறேன். நாம் நினைக்கிற அளவு நம் பேச்சு மற்றவர்க்ளுக்கு முக்கியமில்லை. நயமாக நடந்து கொண்டால் போதும்.

எப்போதெல்லாம் மறுத்துப் பேச வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறதோ அப்போது ஆபத்தின் அறிகுறி என்று எடுத்துக் கொள்கிறேன். நான் சொல்ல நினைப்பதை மொபைலில் உள்ள WriterP (!) என்ற ஆப்பில் டைப் செய்து அதை காப்பி பண்ணி பிங் அல்லது பார்ட்டில் பேஸ்ட் செய்கிறேன். பேஸ்ட் செய்வதற்கு முன், "Please rewrite what follows in clear, concise and courteous language," என்று கோரிக்கை வைக்க மறப்பதில்லை. அது நான் ஒட்டியதை கணிசமான அளவு சுருக்குகிறது, படிக்க எளிதாக மாற்றுகிறது, இன்னும் முக்கியமாக, அதை கண்ணியமான மொழியில் எழுதித் தருகிறது. இந்த மாதிரி எடிட்டர் எனக்கு இன்றைய காலத்தில் மிகவும் அவசியம்.

டிவிட்டரிலிருந்து வெளியேறி மாஸ்டோடானில் தஞ்சம் புகுந்த கொஞ்ச நாட்களில் அது ஃபெடிவர்ஸ் என்ற பிளாட்பாரக் கூட்டத்தில் ஒரு அங்கம் என்று தெரிய வந்தது. நல்ல நாளிலேயே நான் யாரிடமும் பேச்சு வைத்துக் கொள்வதில்லை, வெள்ளைக்காரக் கூட்டம் வேறு, அங்கெல்லாம் என்னோடு பேச யார் இருக்கிறர்கள்? ஆனால் ஓப்பன் வெப்- டிசென்ட்ரலைஸ்ட் இன்டராபரபிள் ப்ரோடொகால் வித் போர்டபிள் சோஷல் கிராஃப்- வல்லமை வாய்ந்தது. எனக்காக இல்லாவிட்டாலும் பிறருக்கு பயன் இருக்கும் என்று மாஸ்டோடான், பிக்ஸல்ஃபெட், ஃப்ரெண்டிகா, கேபின் ஆகிய தளங்களில் அக்கவுண்ட் வைத்து அவற்றின் பயனர் எண்ணிக்கை உயர உதவி செய்தேன். நிறைய பேர் இருக்கும் மாஸ்டோடானில் ஒவ்வொரு நாளும் களப்பணி செய்தேன். மற்ற தளங்களில் வாரம் ஒரு முறையாவ்து எதையாவது லைக் அல்லது மீள்பதிவு செய்து அவற்றின் MAU ஆரோக்கியமாக இருக்க என்னாலான உதவி செய்தேன். என்னைப் போல் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் பேர் வேலை செய்ததால், அதிலும் குறிப்பாக மென்பொருள் துறையினர் காட்டிய ஆர்வம், மெடா ஃபெடிவர்ஸுக்குள் கால் வைக்கத் தூண்டியிருக்கிறது. இன்று அது வெற்றிகரமாக த்ரெட்ஸ் துவங்கி ஒரே நாளில் ஒரு கோடி பயனர்கள் எண்ணிக்கையைத் தொட்டது மகிழ்ச்சிக்குரிய விஷயம். இந்த போக்கு தொடர்ந்தால் நம் எல்லாருக்கும் ஆரோக்கியமான இணையம் கிடைக்கும். போக வேண்டிய தூரம் மிக அதிகம், ஆனால் நல்ல ஆரம்பம்.

வாழ்த்துகள்.

#threads