பதிவுகள்

இணைப்புக்காக

நீ எழுதிக் கொண்டிருந்த குறும்பதிவுத் தளத்தின் முகவரி என்ன, மறந்து விட்டேன், என்று ஒரு நண்பர் விசாரித்தார். நிறுத்தி விட்டேன், என்று பதில் சொன்னேன்.

உண்மையில் எதுவும் படிப்பதில்லை, எழுதுவதில்லை. இதை எழுதினேன், படித்துப் பார், என்று அபூர்வமாக ஓரிரு நண்பர்கள் அனுப்புவதைக் கூட படிப்பதில்லை. இது ஒரு மாதிரி அவமானப்படுத்தும் செயல் என்று மனதில் ஒரு உறுத்தல் இருக்கிறது, ஆனால் அதனால் யாருக்கும் எந்த பயனுமில்லை.

இணையத்தில் ஏதேதோ படித்துக் கொண்டிருக்கிறேன். வாட்சப் மோதல்களும் முடிவுக்கு வந்து விட்டன. லேட்டஸ்ட் டெவலப்மெண்ட்கள் உலகம் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது என்ற உணர்வு அளிக்கின்றன. ஆனால் அது குறித்து தமிழில் எதுவும் வாசிக்கக் கிடைக்கவில்லை என்பது என் வாசிப்பு வட்டம் எவ்வளவு குறுகியதாக இருக்கலாம் என்பதற்கு சான்று.

நண்பர் கேட்டார் என்பதற்காக இதை எழுதினேன், தொடர்ந்து எழுதுவேனா தெரியவில்லை. அப்படி எழுதினால் அது 'மேயர் மாத்ருபூதம்' என்ற புது வலைதளத்தின் ஐந்து இடுகைகளாக இருக்கலாம் (மாத்ருபூதம் என் தாய் வழி தாத்தா பெயர்).

#uncategorised