இன்னும் இரு படங்கள்
There will be Blood: மூன்றாம் முறை பார்க்கிறேன். படம் வந்த புதிதில் ரங்கநாதன் தெரு அருகில் இருந்த கடைகளில் டிவிடி வாங்கி பார்த்தேன். அப்புறம் போன வருடம், இன்று என் மகனுடன். நடிப்பு பிரமாதம், ஒளிப்பதிவு எனக்கு பிடித்திருந்தது. கதை குழப்பமாக இருந்தது. மிகவும் இருண்மையான படம். கொஞ்சம் மத நம்பிக்கைகள் சார்ந்த கதை போலிருக்கிறது. அசாதாரண நடிப்புக்காக பார்க்கலாம். இன்று எடுத்திருந்தால் இரண்டு மூன்று பகுதிகளாக எடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
Lincoln : இதுவும் ஏற்கனவே பல முறை பார்த்த படம்தான். இதிலும் நடிப்பு பிரமாதம், வசனங்கள் பொறி பறக்கின்றன. மிக அருமையான திரைக்கதை. இன்றைய காலகட்டத்தில் கருத்தில் கொண்டு அமெரிக்கர்களுக்கு ஒரு படிப்பினையாக எடுக்கப்பட்ட படம், இது போன்ற படங்கள் இருக்கும் வரை அமெரிக்காவின் பெருமை ஒவ்வொரு தலைமுறை இளைஞனையும் கவருவதாக இருக்கும். தேசபக்தியையும் தனி மனித சுதந்திரத்தையும் ஒரு சேர பேசும் படம், ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் சிலிர்க்க வைக்கும் அனுபவமாக இருக்கிறது