பதிவுகள்

நிலைத் தகவல்

இதோ எழுதுகிறேன், கடைசி நிமிடம் வரை முயற்சி செய்கிறேன் என்றெல்லாம் சொன்னேன், ஆனால் கெடு முடிந்து விட்டது. எதுவும் எழுதவில்லை.

அதற்காக புத்தகம் கூட வாங்கினேன், முதல் கதை படித்ததும் அதைப் பற்றி என்ன எழுதுவது என்று மனதில் அசை போட்டபோது ஒன்று தோன்றியது, என் ஆர்வம் இலக்கியத்தில் இல்லை.

இப்படிச் சொல்லலாம் என் இலக்கிய எதிர்பார்ப்புகள் வேறு. எனக்கு இருக்கும் பிரச்சினைகளைத் தாண்டி இந்த விஷயத்தில் முனைய வேண்டுமென்றால் அதற்கு தகுந்த அலைவரிசையில் உள்ள எழுத்து கண்ணில் புலப்படவில்லை.

இது திமிராக இருக்கலாம் அல்லது சமாதானமாக இருக்கலாம். ஆனால் உண்மையில் என் கண்ணில் படும் எழுத்து அதற்காக என்னைப் போராடச் செய்வதாக இல்லை. Worth fighting for, என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள் இல்லையா, அந்த மாதிரி எதுவும் இல்லை.

#literature