புரிந்துணர்வு
நாம் நல்லது கெட்டது தெரியாதவர்களா? நாம் நடந்து கொள்வதை பார்த்தால் அப்படி தான் இருக்கும். பிறருக்கு தீங்கு செய்கிறோம் என்பது அல்ல. நமக்கே நல்லது செய்து கொள்ள மாட்டேன் என்கிறோம். ஆனால் ஒருத்தர் நம்மிடம் தன் பிரச்சினையை கொண்டு வரும்போது அதை அலசி ஆராய்ந்து சரியான தீர்வு சொல்ல நமக்கு எதுவும் தடையாக இருப்பதில்லை. இது மிகவும் வினோதமாக இருக்கிறது. நிற்க.
ஃபெடிவர்ஸில் ஒருவர் அருமையான அறிவுரை தந்ததைப் பார்த்தேன். "எல்லாவற்றையும் நீ புரிந்து கொள்ளாவிட்டால் போகிறது, அதில் உன் பங்கு என்ன என்பதை புரிந்து கொண்டால் போதும்," என்கிறார் @Mentallyalex@lor.sh.