பதிவுகள்

இங்கிலாந்திருந்து கேட்கும் பழைய குரல்

எல்லாரும் தொடர்ந்து எழுத வேண்டும் என்று சொல்கிறவன் நானே எப்போதாவதுதான் எழுதுகிறேன். காரணம், எழுத எதுவுமில்லை. தப்பு. எழுதும் அளவுக்கு முக்கியமாக எதையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. இது கற்பனையின் தோல்வி. என் நம்பிக்கை வறட்சி. மற்றபடி எழுதத்தக்க விஷயங்கள் எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன.

என் உறவினர்களில் எழுதுபவர்கள் இருவர், ஒருவர் பாலாஜி. இன்னொருவர் பிரபாகர். பாலாஜி ஆங்கிலத்தில்தான் எழுதுகிறார். பிரபாகர் தமிழில் எழுதுகிறார். இப்போது மூன்றாமவர் எழுதுவதாக கேள்விப்பட்டேன். இங்கு கிரிக்கெட் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார் தினகர்.

இதைப் படிக்கும்போது சின்ன வயசில் நாங்கள் கிரிக்கெட் விளையாடியதும் அது பற்றி சண்டை போட்டுக்கொண்டதும் நினைவுக்கு வருகின்றன. எக்காரணத்தாலோ கிரிக்கெட் ஆர்வம் குறைந்தது, அந்த இடத்தை அரசியல் பிடித்துக் கொண்டது. அரசியலிலும் என் டீம் தான் எப்போதும் ஜெயிக்க வேண்டும்.

பாண்டியா நல்ல காப்டனா இல்லை ரோஹித் நல்ல காப்டனா என்று சண்டை போடுவதில் அதானி உசத்தியா அம்பானி உசத்தியா என்று சண்டை போடுவதில் இல்லாத களங்கமின்மை இருக்கிறது. தினகர் இன்றளவும் கிரிக்கெட் பற்றி சிந்திப்பது இக்காலத்தில் மிகப் பெரிய விஷயம்.


தினமும் நாலு எழுத்து எழுத வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இதை மொபைலில் இரவு தூங்கப் போவதற்கு முன் செய்யும் கடைசி காரியமாக எழுதுகிறேன். இந்த நாலு வரிக்கே அரை மணி நேரம் ஆகிவிட்டது.

#cricket