பதிவுகள்

ஏய்ப்பர்கள் இருவர்

காலையில் எழுந்ததும் ஒரு மணி நேரம் தலைக்குள் செய்திகளை நிரப்பிக் கொண்டபின் நாளெல்லாம் கவலை, கலவரம், கோபம், பீதி, முனைப்பின்மை என்று பாழாய்ப் போகாமல் வெறெப்படி இருக்கும்?


மஸ்க்கின் வயது 51, சக்கர்பெர்க் 39. இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, என்னோடு cage fight போடும் கெத்து உனக்கு இருக்கா என்று மஸ்க் கேட்க ஜக்கும் சவாலை ஏற்றுக் கொண்டிருக்கிறார், மஸ்க் இன்ன இடத்துக்கு வா ஒத்தைக்கு ஒத்தை பாக்கலாம் என்று இடம் சொல்லியிருக்கிறார்.

ஒரு மில்லியன், பத்து லட்சம், நொடிகள் ஆயுள் விதியிருந்தால் அது பன்னிரெண்டு நாட்களில் முடியும். ஒரு பில்லியன் என்றால் முப்பத்தொரு ஆண்டுகள்.

இவர்கள் எல்லாம் பில்லியனேர்கள். மத்திம வயதை கடந்து விட்டவர்கள் (ஜக் கிட்டத்தட்ட). நாமறிந்த பெரிய மனிதர்கள் யாராவது இப்படி நடந்து கொள்வார்களா? அதிலும் கௌரவமான நிலையில் வாழும் பணக்காரர்கள்?

என்ன ஒரு பைத்தியக்காரத்தனம் என்று நினைக்காமல் நாமும் இதெல்லாம் நார்மல் என்று எடுத்துக் கொள்கிறோம். நமக்கு எல்லாம் கேமிஃபை ஆகிவிட்டது என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். நாம் வாழ்வை சீரியஸாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று விரும்புவதால் விளைவுகள் மென்மையாக மாறுவதில்லை. பணம் பண்ணுபவர்கள் மேலும் மேலும் பணம் பண்ணிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

வெற்றி முத்திரை ஒரு மாயாவித் தன்மையை தந்து விடுகிறது. கண் முன்தான் எல்லாம் நடக்கிறது ஆனால் அதை கண்டு கொள்ளும் ஆற்றல் நமக்கில்லை. போக்கிரிகளும் கேடிகளும் நாயகர்களாகவும் கில்லாடிகளாகவும் திரிந்து கொண்டிருக்கிறார்கள். இதைச் சொல்லப் போனால் நமக்கு லெப்ட் லிபரல் என்ற பட்டம் கிடைக்கும்.


தி வில்லேஜ் பார்த்து முடித்து விட்டேன். ஆரம்பத்தில் மிக அருமையாக இருந்தது. அப்புறம் எங்கெங்கோ போய் சாதாரண கதையாய் மாறி விட்டது. பல சாத்தியங்களைத் தவற விட்டிருக்கிறார்கள். நடிப்பு நன்றாக இருக்கிறது, இருளைக் கருநீல வண்ணத்தில் காட்டுகிறார்கள், அது அழகாக இருக்கிறது. படம் முடிந்த கையோடு King of Clones என்ற ஆவணப் படத்துக்கு தாவி விட்டேன்.

#random