இணைய போராளி
தினமும் காலை எழுந்தவுடன் ஃபிங்கர் புரோட்டாகாலில் வாசிப்பதற்காக நாலு வார்த்தை எழுதுகிறேன். ஒரு நான்கைந்து பேர்தான் அங்கே தொடர்ந்து எழுதுகிறோம், வாசிக்கிறோம், இருந்தாலும் அதில் ஒரு சின்ன திருப்தி.
அப்புறம் தினமும் மாஸ்டோடானிலும் ஃபிரண்டிகாவிலும் ஏதாவது ஒன்றிரண்டு மைக்ரோபதிவாவது வர வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். நான் மோசமான போட்டோக்கள் எடுத்தாலும் பிக்ஸல்ஃபெடில் தினமும் இரண்டாவது வர வேண்டும் என்பதில் கருத்தாக இருக்கிறேன். இது போல் ஆளே இல்லாத ஊரில் நாலு கடை ஏறி இறங்கி கர்ம சிரத்தையாக டீ ஆற்றுகிறேன் (நாலாவது கடை இந்த பதிவுதான்).
இந்த நேரத்தில் உருப்படியாக ஏதாவது செய்யலாம் என்றால் ஓப்பன் வெப்பை போஷிக்க இந்த குறைந்தபட்ச உழைப்பு அளிப்பதை விட வேறு என்ன வேலை முக்கியமாக இருக்க முடியும்?
ராகா சுரேஷ் சில ஆண்டுகளுக்கு முன் பர்ஸா என்ற நாவல் வாசிக்க தந்திருந்தார். எப்போதும் என் டெஸ்க்டாப்பில் இடது பக்கம் வைத்திருந்தேன். வீடு மாற்றும் போது எந்த காகிதப் பெட்டியில் போட்டேன் என்று தெரியவில்லை. எல்லாம் பரணில் வேறு பத்திரமாக இருக்கிறதா, அவர் விமர்சனம் எழுத கேட்கிறார், என்னால் எடுத்துக் கொடுக்க முடியவில்லை. அது போக அவர் இரண்டு வாரங்களுக்கு முன் எழுதிய கதையும் இப்போதே பிரபலமாகி ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இன்னொரு கதையும் காத்திருக்கின்றன. நாளை முடியுமா பார்க்கலாம்.