பதிவுகள்

அமெரிக்கன் சைக்கோ

உலகத்தில் கவலைப்பட ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. அவை எல்லாம் மெய்ப்படும் என்று சொல்ல முடியாது. நூற்றுக்கு ஒன்றோ இரண்டோ நாம் பயந்த மாதிரி, அல்லது, அதை விட மோசமானபடி நடக்கும். எனவே எப்போதும் எதற்கும் பயந்து கொண்டிருப்பது முட்டாள்தனம்.

இருந்தாலும் 'அப்பவே சொன்னேன், பாத்தியா," என்று திருப்திப்பட்டுக் கொள்ள சில விஷயங்களைப் பதிவு செய்வது அவசியம்.

அந்த வகையில் அமெரிக்காவில் நடக்கும் பட்ஜெட் அக்கப்போரின் விளைவுகள் இன்னொரு கோவிட் பேரழிவுக்கு இணையாக உலக பொருளாதாரத்தையும், அதன் எதிரொலியாக சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக நல்லிணக்கங்களை பாதிக்கும் காரன்னமாக வாய்ப்பு உள்ளது. அந்த அளவுக்குப் போக விட மாட்டார்கள் என்று நினைக்கிறேன், ஆனால் சொல்ல முடியாது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

எதற்கும் இந்த இடத்தில் ஒரு கண் வைத்திருங்கள்.

#default