பதிவுகள்

சதிவலை

இரண்டு நாட்கள் முன் பேசிக் கொண்டிருந்த ஒரு நண்பர், "அமெரிக்காவின் பிரசாரம் இனி எடுபடாது, இது இணையத்தின் காலம்," என்றார். ஆமாம் என்று ஒப்புக் கொண்டேன், இன்று அமெரிக்க பிரச்சாரத்தை விட ருஷ்ய பிரசாரம் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது. இதை நண்பர் காதில் போட்டுக் கொள்ளவில்லை. கவனிக்கத் தவறி விட்டார் என்ற சந்தேகத்தில் அதையே மூன்று முறை சொன்னேன். மூன்று முறையும் வெற்றிகரமாக கடந்து சென்று விட்டார். அமெரிக்காவின் மூக்கு அறுபட வேண்டும் என்பதற்காக உக்ரெயின் ருஷ்ய படையெடுப்புக்கு பணிய வேண்டும், என்று எதிர்பார்த்தவர் அவர்.

ஒரு விஷயத்தை எல்லாரும் சொன்னால் அதில் ஒரு சதி இருக்கிறது, அதை ஏற்றுக் கொள்பவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள், நாம் சொந்தமாய்ச் சிந்திக்க வேண்டும் என்ற மனநிலையின் வெளிப்பாடு இது- பிரசாரகர்கள் இதை வெகு சாமர்த்தியமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

“All the globes, everywhere,” Taylor said later in the discussion. “I turn on the TV, there’s globes in the background … Everywhere there’s globes. You see them all the time, it’s constant. My children will be like ‘Mama, globe, globe, globe, globe’ — they’re everywhere.”

“That’s what they do, to brainwash,” she added. “For me if it’s not a conspiracy. If it is real, why are you pushing so hard everywhere I go? Every store, you buy a globe, there’s globes everywhere. Every movie, every TV show, news media — why? More and more I’m like, it doesn’t make sense.” -Why Are You Pushing Hard Everywhere I Go?

#random