பதிவுகள்

என் உண்மை மனநிலை

இலக்கியம் பேச வேண்டும், தம் எழுத்து குறித்து உரையாட வேண்டும் என்று விரும்பும் இரு நண்பர்களை இணைத்து புது வாட்ஸ்அப் குழுமம் ஆரம்பித்திருக்கிறேன். Chaos Inc- Writing the Crises என்று பெயர் வைத்திருந்தாலும் பெரிய எதிர்பார்ப்பில்லை. அவர்களாவது ஒருத்தருக்கொருத்தர் பேசிக் கொள்ளட்டும், அது போதும்.

என்னளவில் complacent ஆக இருக்கும் எழுத்தைப் பார்த்தால் சோர்ந்து போகிறது. நேற்று worth fighting for என்று எழுதினேன், உண்மையில் எனக்கென்று ஒரு நேரத்தை சண்டை போட்டுதான் மீட்க வேண்டியிருக்கிறது. ஒரு காரியத்தைச் செய்கிறேன் என்றால் அதற்கு இன்னொரு காரியத்தை விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை. இதில் அலுத்துப் போயே ஆணியே புடுங்க வேண்டாம் என்று இருக்கிறேன்.

இந்த மனநிலை, கூடவே பருவ நிலை மாற்றம் போன்ற பட்டியலிட முடியாத புற விஷயங்கள், இலக்கியத்தின் மீது ஒரு சலிப்பை உண்டாக்கி விட்டது. பீலிங்ஸ் ஒரு பெரிய விஷயம் என்று என்ன கதை பண்ண இருக்கிறது என்றெல்லாம் நினைக்கும் தீவிரவாத நிலையில் இருக்கிறேன்.

The sense that things are changing irrevocably. The feeling that status quo is intolerable. A sense of urgency, impending crisis. And the need to recognise that reality cannot be narrativised, it cannot be distorted.

என்று ஒரு நண்பருக்கு எழுதினேன். இப்படிப்பட்ட சென்சிபிலிட்டிதான் இப்போது அப்பீலிங்காக இருக்கிறது. ஆனால் இந்த மாதிரியெல்லாம் யாரும் எழுதுவதாக தெரியவில்லை. தன் உண்மை நிலை தெரியாத ஒரு மிதப்பு நம் காலத்தின் சிக்கல்களை அறியாத எழுத்தில் இருக்கிறது என்று தோன்றுகிறது. அதற்கு என் அன்னியப்பட்ட நிலையும் ஒரு காரணமாக இருக்கலாம்.

#literature