கரடி
The Bear பற்றிய விமர்சனங்கள் பிரமாதமாக இருந்ததால் அது என்ன ஏது என்று எதுவும் தெரிந்து கொள்ளாமல் பார்க்க ஆரம்பித்தேன். அண்ணன் தற்கொலை செய்து கொள்கிறான், தனக்கு எழுதி வைக்கப்பட்ட ஹோட்டலை நடத்த உலகின் தலைசிறந்த ஹோட்டலில் உலகின் சிறந்த செஃப்பாக கௌரவிக்கப்பட்ட ஹீரோ சிகாகோ வருகிறான். அப்புறம் என்ன நடக்கிறது, அவன் எதிர்கொண்ட சோதனைகள் சாதனைகள் கதை. எட்டு அரை மணி நேர எபிசோடுகள், இன்று பார்த்து முடித்தேன்.
இரண்டாம் சீசன் ஆரம்பிக்கும்போதே ஆர்வமில்லை, நான்கு எபிசோடுகள் தூங்கினேன். தொடர மாட்டேன் என்று நினைக்கிறேன்.
இரவு சுதிர் மிஸ்ரா இயக்கிய afwaak பார்த்தேன். இன்றைய டிரெண்டின்படி சமூக பிரச்சினைகளை அடிப்படையாய் கொண்ட மசாலா படம். தூக்கலான பிரச்சார நெடி. பிரச்சினைகளின் கனம் அதனால் பாதிக்கப்பட்ட வாழ்வுகள் இவற்றை மலினப்படுத்தும் வகையில் படம் எடுப்பது முறையல்ல. அதற்கு ஏற்ற சீரியஸ் தன்மை வேண்டும், இப்படி சொல்லப்பட்ட வகையில் அது இல்லை.