பதிவுகள்

இரு செய்திகள்

நண்பர் ராகா சுரேஷ் பல முறை பரிந்துரைத்த காரணத்தால் மூபிக்கு ஆண்டுச் சந்தா கட்டினேன். அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் நான் பார்க்கும் முதல் படமாக 'The Music of Satyajit Ray' என்ற ஆவணப் படத்தைத் தெரிவு செய்தேன். அதன்பின், 'So Long My Son' என்ற சீன மொழித் திரைப்படம் பார்த்து உலக சினிமா ரசிகர் வட்டத்தில் என்னையும் இணைத்துக் கொண்டேன். இனி கீஸ்லோஸ்கி, குரோஸ்தாமி இன்னும் பலர் இருக்கிறார்கள், ஜிம் ஜார்முஷ் படங்கள் தவற விடக்கூடாதவை என்கிறார் சுரேஷ், அவற்றையும் பார்க்க வேண்டும்.

என் முதல் கிண்டில் சிங்கப்பூரிலிருந்து வரும்போது என் அத்தை மகன் பரிசாய்த் தந்தது. அப்போது அது பற்றி நண்பர் ஹேம்கன் கணேஷ் தளத்தில் ஒரு நீண்ட இடுகையிட்டேன். அது (கிண்டில்) இன்னும் நன்றாக வேலை செய்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் கிண்டில் மோகத்தால், என் மகன் முதல் சம்பளத்தில் என்ன வாங்கித் தரட்டும், என்று கேட்டபோது அதுவே இன்னொன்றும் வேண்டும் என்று தேர்வு செய்தேன். ஆனால் பதிவு எதுவும் எழுதும் எண்ணம் இம்முறை வரவில்லை. இந்த இரண்டாம் கிண்டில் அளவில் சற்றே சிரிது என்பதால் கைக்கு இன்னும் வாகாக இருக்கிறது. ஏதோ படித்துக் கொண்டிருக்கிறேன்.

##update