எல்லாருக்கும் ஓருலகம்
உனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று கேட்கிறார்கள் நானும்கூட அப்படித்தான் கேட்டுக் கொள்கிறேன் சில சமயம் ஆனால் இங்கு வந்து பார்த்தால்தான் தெரியும் எல்லாருக்கும் ஏதாவதொன்று எப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது என்பது.
மகிழ்ச்சியான குடும்பங்கள் ஒரே மாதிரி இருக்கின்றனவோ இல்லையோ இப்படி ஆனவர்கள் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள், தோன்றும் துளைகளில் மகிழ்ச்சியை அள்ளிக் கொண்டு.