நிமிடக் கணக்குகள் இரண்டு
ஒன்று. எந்த காரியமானாலும் அடுத்த நிமிடத்துக்குள் செய்து விடலாம் என்றால் அதை உடனே செய்து விட வேண்டும். செய்யாமல் விடும் வேலைகள் அடுத்தடுத்து ஒன்று சேர்ந்து நம் நிம்மதியைக் கெடுக்கின்றன.
இரண்டு. சில வேலைகள் ஒவ்வொரு நாளும் செய்யும்படி இருக்கும். உடற்பயிற்சி செய்வது, பாடம் படிப்பது, கதை எழுதுவது, இந்த மாதிரி. மணிக்கணக்காக செய்ய முடியாதபோதுகூட தினமும் ஐந்து நிமிடமாவது அதற்கு செலவிட வேண்டும். நாளைக்கு என்று தள்ளிப் போடுவோம், அது ரெண்டு நாளாகும், அப்புறம் வாரங்கள் மாதங்கள் என்று போய் சுகர் ஏறும், பரீட்சையும் வந்து விடும்.