எப்படி எழுதுகிறேன்
டிராப்டிங், அப்சிடியன் என்று இரு ஆப்புகள் என் மொபைலில் இருக்கின்றன. எழுதும்போது இருக்கும் மனநிலைக்கு ஏற்ப இதில் ஏதோ ஒன்றில் எழுதுகிறேன்.
பெரும்பாலும் மிகச் சிறிய பதிவுகள். தனி தளத்தில் எழுதும் அளவு ஆழமான கருத்துகள் இல்லை, பத்திகளும் இல்லை. உரையாடும் ஆர்வம் இல்லாதது, பேஸ்புக் மீது வெறுப்பு இவ்விரு காரணங்களால் எதையோ எழுதி அழிக்கிறேன், அல்லது மறக்கிறேன்.
அப்சிடியனில் எத்தனை சொற்கள் எழுதியிருக்கிறோம் என்பதை பார்த்து எழுதியதில் மூன்றுக்கு ஒரு பங்கு நீக்கி இன்னும் சிறிய பதிவுகளாக இடுகையிடுகிறேன். அப்படியும்கூட திருப்தியில்லை, சொல்ல வந்ததை இன்னும் சுருக்கமாகச் சொல்லியிருக்கலாம்.