பதிவுகள்

மேனியா

இப்போது டே ஒன்னில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். ஏதாவது குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றினால் உடனே அப்சிடியன் திறந்து ஒரு யூனிக் நோட். அதன் தலைப்பு தேதியும் நேரமும். நாலு வார்த்தைகளோ வரிகளோ மனதுக்கு தோன்றியதை எழுதுகிறேன். அப்புறம் அதை காப்பி செய்து டே ஒன்னில் பேஸ்ட் செய்கிறேன். இது எப்படி முடியும் என்று தெரியும். பல தடவை இப்படித்தான் ஆகியிருக்கிறது. கூடிய சீக்கிரம் எழுதுவதில் ஆர்வம் இழந்து எல்லாவற்றையும் நிறுத்தப் போகிறேன்.

#blogging