சட்டம் தொட முடியாத உயரங்கள்
எப்ஸ்டீன் கோப்புகள்: எப்ஸ்டீன் தனது குற்றங்களுக்காக சிறை தண்டனை அனுபவித்தபின்னும் ஒரு முறை மஸ்க், சக்கர்பெர்க், தீல், மற்றும் ஹாப்மன் முதலிய பண முதலைகளுடன் விருந்து சாப்பிட்டிருக்கிறார். ஏதோ பருவநிலை மாற்றம், குடியேற்ற ஆதரவு போன்ற நல்ல விஷயங்களுக்காக சிறை சென்றிருந்தாலும் பரவாயில்லை. மிகக் கேவலமான குற்றங்கள் உறுதியாகி தண்டனை பெற்ற ஒருவருடன் இவர்கள் விருந்து சாப்பிடுகிறார்கள் என்றால் சட்டத்தைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? தண்டனை எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும், சட்டங்களின் நோக்கம் சமூக ஒழுங்கைப் பாதுகாப்பது என்பதும் இவர்களுக்கு தெரியாமலா இருக்கும்?