உந்துதல்
எதையாவது எழுத வேண்டும் என்று கை பரபரக்கிறது. ஆனால் எழுத விஷயமில்லை.
விஷயமில்லை என்று சொல்வது அவ்வளவு பொருத்தமாக இருக்காது, எழுதக்கூடிய விஷயம் இல்லை. இதெல்லாம் வந்து போகும் உந்துதல்கள், இதற்கெல்லாம் மதிப்பு கொடுக்கக்கூடாது.
ஆனால் எழுதுவதும் எழுத்து சார்ந்த செயல்களில் ஈடுபடுவதும் ஒரு பாதுகாப்பு கவசம் மாதிரி மற்ற பல பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றும் என்ற நினைப்பு திடீரென்று வருகிறது. அது ஒரு வழிபாடு மாதிரி என்று எந்த ஆன்மீக பாவமும் இல்லாமல் ஒரு பாமர அச்ச மனநிலையிலிருந்து மட்டுமே சொல்லிவிட முடியும்.